நடப்பாண்டின் முதல் 07 மாதங்களில் இலஞ்சம் தொடர்பாக 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் இலஞ்சம அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் அடிப்படையில் 72 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்களெனவும் அதில் 17 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரசு நிறுவனங்களிலிருந்தும் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த மாதங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் 39 நபர்கள் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சக செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளது.
