யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
