Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ரணிலை முன்னமே கைதுசெய்திருக்க வேண்டும்- பிமல்ரத்நாயக்க!

ஆகஸ்ட் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யூலைக்கலவரம், யாழ்நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைதுசெய்திருக்க வேண்டும்.தற்போது நடந்த விடயம் சிறியபிரச்சனை தான் என்று நெடுஞ்சாலைகள்மற்றும்,கப்பற்போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையானது ஒரு அரசாங்க பழிவாங்கல் அல்ல. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றது.

இதுவரை காலமும் இந்தநாட்டில் சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் எமது ஆட்சியில் யார் எவர் என்ற தராதரம் பாராது, அனைவருக்கும் சமமான வகையில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

தற்போது இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியாதவர்கள்,மக்களால்தோற்க்கடிக்கப்பட்டவர்களே இன்று, ஒன்று சேர்ந்துள்ளனர்.

ரணிலின் காலத்திலேயே யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது,கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்றது.அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வவுனியா, செட்டிகுளம் பகுதிகளிற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். அத்துடன் பட்டலந்தை அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும்.
எனவே அந்த காலப்பகுதியில் தான் இவரை கைதுசெய்திருக்க வேண்டும். இது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்தியவங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் ஊழல்வாதிகள்,அரச பணத்தை மோசடிசெய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும். பொலிசார் சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளை செய்வதற்கான சூழல் தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அரசு என்றவகையில் பொலிசாருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை. என்றார்.

முந்தைய செய்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு !
அடுத்த செய்தி முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படலாம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தேர்தலில் தமிழரசுகட்சி தனித்தே போட்டியிடும் – எம்.ஏ. சுமந்திரன்

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஆசிரியர் தண்டித்தமையால் உயிர்மாய்க்க முயன்ற மாணவன்!

ஜூன் 7, 2025
இலங்கை

சுதந்திர தினத்தன்று சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரியாலையை குப்பை மோடாக மாற்ற மாட்டோம் – நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதி

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?