Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (18.08) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் பெரும்பாலன கடைகள் பூட்டப்பட்டுளளன. பூட்டப்பட்டுள்ள ஒரு சில கடைகளை சிலர் அச்சுறுத்தி திறக்க வைப்பதையும் காணலாம். சுயமாகவே மக்கள் கடைகளைப பூட்டி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற போது அதனை மாற்றியமைக்கும் முகமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் கடைகள் அனைத்தும் வவுனியா பசார் வீதியில் மூடப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு கிடைத்துள்ளது.

வவுனியா போன்று யாழ்ப்பாண வாத்தக சங்கமும் செயற்பட்டதால் நகரில் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எமது கோரிக்கையை ஏற்று வியாபார நிலையங்களை மூடி ஆதரவு தந்தவர்களுக்கு நன்றிகள். பலத்த அழுத்தத்திற்கு மத்தியிலும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணு முகாம்கள் மூடப்பட வேண்டும். அதற்கு எதிரான போராட்டம் 29 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார். எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம்.

மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது. இது ஒரு அடையாள எதிர்ப்பை செய்துள்ளோம். கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.

வர்த்தக சங்க தலைவர் கேட்கும் போராட்ட முறைகளுக்கு பதில சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கனடாவில் பணிநிறுத்த போராட்டத்தால் 600 விமானசேவைகள் இரத்து!
அடுத்த செய்தி வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட மீன்பிடி பூனை

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
இலங்கை

பதில் காவல்துறை மாஅதிபராக சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்திநாயக்க நியமிப்பு!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகை கேரளா கஞ்சாமீட்பு!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?