மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 5 மணிக்கு கண்டியிலுள்ள நிட்டவெல குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளன.
இன்று இரவு முதல் மஹியாவில் உள்ள அவரது இல்லத்தில் அன்னாரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கடுமையான உடல்நலப் பாதிப்பால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த லொஹான் ரத்வத்த, இன்று தனது 57வது வயதில் உயிரிழந்துள்ளார்.
