WhatsApp நிறுவனம் பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது .
தற்போது, WhatsApp பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் Guest Chat என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய அம்சத்தில் WhatsApp பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு Link ஐ அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.
இந்த Link ஐ, SMS ,ஈமெயில் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.
இந்த Link ஐ Click செய்தால், தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் WhatsApp ஐ Download செய்யாமலேயே உரையாட முடியும்.
ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.