யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாளுடன் இளைஞனொருவனை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே முதலி கோவிலடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து , விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இளைஞனிடமிருந்து வாள் ஒன்றினை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட வாளினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிசாரிடம் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.
