தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்கு தெரியும்.
சினிமாவில் கூட அது பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. இப் படத்துக்கு அனிருத் இசைமையத்துள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கூலி திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு செட் ஜிபிடியிடம் உதவி கேட்டதாக கூறியுள்ளார் அனிருத்.
“முழு பாடலையும் தயார்செய்துவிட்டேன். ஆனால், இரண்டு வரிகளை மாத்திரம் எழுத முடியாமல் இருந்தேன். அப்போது செட் ஜிபிடியிடம் உதவி கேட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இப்பொழுதே மக்கள் அது எந்தப் பாடலாக இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
