சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகையும் மொடல் அழகியுமான மீரா மிதுன்.
இந்நிலையில் அவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வழக்கில் அவரை கைது செய்து ஒகஸ்ட் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
