விஜய் சேதுபதி. நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’.
மேலும் விஜய் சேதுபதியின் 52 ஆவது திரைப்படமான இப் திரைப்படமானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குடும்பங்கள் வரவேற்கும் திரைப்படமாக அமைந்துள்ளதோடு, கணவன் மற்றும் மனைவிக்கிடையில் உள்ள அன்பு, , சண்டை, கோபம் அனைத்துக்கும் விவாகரத்து மட்டுமே தீர்வாகிவிட முடியாது என்பதை இப் படம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 50 கோடி ரூபாயை தற்போது கடந்துள்ளது.
மேலும் ‘சார் – மேடம்’ எனும் பெயரில் இத் திரைப்படம் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
