ரஷ்யாவானது உக்ரைன் மீது தொடர்ந்து வான்வழி தாக்குதலை மேற்க்கொண்டு வந்த நிலையில், தற்போது ரஷ்ய விமானத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிளைடு குண்டுகள், பயிற்சி விமானம் மற்றும் “பிற விமானங்கள்” உள்ள கிடங்குகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான போதும் குறித்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதன் போது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்ய உக்ரைன் போர் இடம்பெற்று வருவதுடன் இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
