துருக்கி மற்றும் சிரியாவில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்
துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு துருக்கியில் 10 இடங்களில் பரவிய மிகப் பெரியளவிலான காட்டுத் தீயானது கட்டுப்படுத்தப்பட்டதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் யுமாக்லி தெரிவித்துள்ளார்
இதுகுறித்த விசாரணையில், துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்ததன் மூலம் தீ உருவாகியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல், சிரியாவின் ஹடாய் மாகாணத்தின், டோர்டியோல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இந்தத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வீசும் பலத்த காற்றினால் தீ மேலும் பல இடங்களுக்கு பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 920 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
மேலும், லடாகியா மாகாணத்தில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக சிரியாவின் இடைக்கால பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், சிரியாவில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த துருக்கி அரசு 2 தீயணைப்பு விமானங்களை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.