வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவின் கொட்டியாகல பகுதியில் உள்ள தேயிலைத்
தோட்டத்தில் 73 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல, மன்னார் பொலிஸ் பிரிவின் ஒலுதுடுவாவ மற்றும் கல்கிசை கடற்கரைகளிலும் அடையாளம் தெரியாத ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடங்கள் தொடர்பில் அந்தந்த நகர பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.