இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை[7] பல இடங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள் வவுனியாவிலும் இடம்பெற்றது.
வவுனியா பட்டாணிச்சூரின் வேப்பங்குள குளவீதியில் அமைந்துள்ள தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இத்தொழுகை நிகழ்வானது ஜமாத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸாதிகீன்(பாரி)யினால் இடம்பெற்றதுடன் இத்தொழுகையின் போது இஸ்லாமியர்கள் பலரும் கலந்து தொழுகையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
