வெள்ளத்தினால் பாதிக்கப்படும் வடிகான்கள் இந்த வருடத்திலேயே புனரமைக்கப்படுமா? இல்லை, அதற்காக அடுத்த வருடம் வரையில் காத்திருக்க வேண்டுமா? என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி. சரத் இந்த வருடத்தில் அவற்றை புனரமைக்க இயலாது எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு அடுத்த வருடம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.