அமரர் ஆசிரியர் அ.க. இராமலிங்கம் அவர்களது 25 ஆம் ஆண்டு நினைவின் ஒட்டி அவரது புதல்வரான மூத்த வழக்குரைஞர் இரா.திருக்குமரநாதன் அவர்களது ‘சட்டமும் மக்களும்’ நூல் வெளியீடானது 2025/06/15 ஆம் நாளாகிய இன்று இ. கி. ச. இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐயாவின் மூத்த புதல்வன் இரா. சண்முகநாதன் அவர்கள் அவர்கள் மலரின் சிறப்பு பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநரது பிரத்யோக செயலாளர் திரு.V.இராஜசேகர், ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பிரதம குருக்கள், இ. கி. ச. இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.S.கணேஷலிங்கம், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் உ.அஜித்குமார் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு மூத்த வழக்குரைஞர் இரா.திருக்குமரநாதன் அவர்கள் மலரின் சிறப்பு பிரதிகளை வழங்கி வைத்தார்
மேலும் அறிவு ஒளி மையத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பதங்கங்கள் வழங்கி வைக்கப் பட்டன.
இந்த நிகழ்வில் திருக்கோணமலையின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.