Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

ஜூன் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல்போனது தொடர்பான முக்கிய சாட்சியை மிரட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ம் ஆண்டு ஜனவரி 24, அன்று காணாமல் போனார். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தற்போது விசாரணை நடந்து வருகின்றது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலானவர்கள் சம்பவம் நடந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்தனர்.

வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஷ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்ததுடன் கூடுதலாக ஜூன் 06ஆம் திகதி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து செய்யப்பட்ட மற்றொரு மிரட்டலின் விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவற்றை கருத்தில்கொண்டு ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்னவை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன் தற்போது நடந்து வரும் விசாரணைக்காக 13ஆம் திகதி மேல்நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்துமாறு கட்டளையிட்டார்.

முந்தைய செய்தி கொள்கை கூட்டின் யாழ் மாநகரசபை மேயர் அறிவிப்பு
அடுத்த செய்தி வவுனியாவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

ஆகஸ்ட் 8, 2026
இலங்கை

எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து இருவர் உயிரிழப்பு மேலும் 16 பேர் மருத்துவமனையில்!

செப்டம்பர் 4, 2025
இலங்கை

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து – விமல் வீரவன்ச

மே 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?