கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ புகை காரணமாக,டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொராண்டோ பெரும்பாக பகுதி மற்றும் தென்கிழக்கு ஒண்டாரியோ பகுதிகளில் சிறப்பு காற்று தர அறிவிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் மாத்திரம் வட ஒண்றாரியோ மற்றும் மேற்கு கனடாவில் 15 கட்டுப்பாடற்ற காடுத்தீக்கள் பதிவாகியுள்ளதாக கனேடிய சுற்றாடல் திணைக்களத்தின் Environment Canada வானிலை நிபுணர் டேவிட் பிலிப்ஸ் கூறியுள்ளார்.
இந்த புகை மூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டொராண்டோ இன்று உலகில் 4வது மோசமான காற்று தரம் கொண்ட நகரமாகப் பதிவாகியுள்ளது.
காற்று தர அறிவிப்பு அமுலிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், வெளியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டுமேன குறிப்பிடப்பட்டுள்ளது
