இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
204 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.