இம் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 மே 01 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் (2024 ) மே மாதத்துடன் ஒப்பிடும்போது, சுற்றுலா பயணிகளின் வருகையில் 7.1% அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் மாத்திரம் 42,899 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8382 சுற்றுலா பயணிகளும், சீனாவிலிருந்து 7,965 பயணிகளும் ஜேர்மனி , பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.