இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் உலக அழகி போட்டியின் போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கையரும் இவராவார் என்றும் , அவரது ஊடகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த சாதனையின் மூலம், 108 பங்கேற்பாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிமீடியா சவாலின் முதல் 8 உலகளாவிய வெற்றியாளர்களில், மதிப்புமிக்க இடத்தையும் அனுதி குணசேகர பெற்றுள்ளார்.
இதேவேளை இறுதிப்போட்டி நாளை நடைபெறும் எனவும் இறுதி போட்டியின் போது புதிய உலக அழகி முடிசூட்டப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.