அமெரிக்காவின் கலிபோர்னியா சிமி பள்ளத்தாக்கில் உள்ள வுட்ராஞ்சல் பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உயிர் இழந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விழுந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினார்கள்.
இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.