Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாடெங்கிலும் மே தினப் பேரணிகள்

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் என்பன நாளை வியாழக்கிழமை மே தினக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, தேசிய மக்கள் சக்தி அதன் மே தினக் கூட்டத்தை, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணி திரளும்’ என்ற தொனிப் பொருளில் மாலை 3.30 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் மே தினக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியும் பொதுக் கூட்டமும் ‘கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 2.00 மணிக்கு தலவாக்கலையில் முன்னெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன கொழும்பில் தமது மே தினக் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அவிசாவளையில் மே தினக் கூட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மன்னாரில் மே தின நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்வசன அதிகாரம், தேசிய சுதந்திர முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முந்தைய செய்தி அருகம்புல் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
அடுத்த செய்தி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

டிசம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் – கருத்துக்கணிப்பில் ‘பார்டி கியூபெக்வா’ முதலிடம்; மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஆளும் CAQ கட்சி!

ஜூன் 10, 2026
இலங்கை

ராகமையில் தடம்புரண்ட ரயில்!

அக்டோபர் 2, 2025
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் மகன் கைது

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?