உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.