Whatsapp தற்போது அதிகமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. Phone பேசும் பொழுது பயனர்களுக்குக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், Media ஐ Share செய்யும் பொழுது privacy ஐ அதிகப்படுத்தவும் இந்தப் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
WABetaInfo இன் தகவலின்படி , இந்தப் புதிய அம்சங்கள் Android Whatsapp இன் 2.25.10.16 Beta Version இல் தற்போது அறிமுகமாகியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட அளவிலான பயனர்கள் இதனை தற்போது சோதனை முயற்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படிச் சோதனையில் இருக்கும் அம்சங்களில் ஒன்று incoming voice Callகளுக்கு Microphone Option Mute ஐ செய்வது. இந்த அம்சம் notifications பேனலில் கிடைக்கிறது.
இதன் மூலமாக பயனர்கள் Microphone ஐ Mute செய்தவாறு பேசலாம். இதற்கான எதார்த்தமான பயன்பாடு என்பது மாறுபட்டாலும், அதிக இரைச்சல் நிறைந்த சூழல்கள் அல்லது தாம் எதுவும் பேசாமல் எதிரே Phone இல் பேசுபவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் கேட்க நினைப்பவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
இரண்டாவது Update Video Callகளுக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக பயனர்கள் Video Callக்கு பதில் அளிக்கும் முன்பு Camera ஐ Disable செய்வதற்கான Option ஐ பெறுகிறார்கள்.
Video Call பேசுவதற்கு Camera ஐ On செய்வதற்கு முன்பு ஒரு சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அல்லது Video இல் தங்களை காட்ட வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
மேலும் இது தெரியாத நபர்களிடமிருந்து Video Call வரும் பொழுது நமது பாதுகாப்பை அதிகரிக்கிறது