Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு…

மார்ச் 20, 2025
mannar
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று வியாழக்கிழமை (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பொலிஸ் பாதுகாப்புடன் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (20) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.

கட்சியின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் மன்னார் நகரசபை,நானாட்டான் ,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.

இதேவேளை கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம் வியாழக்கிழமை(20) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் மன்னார் நகர சபை,மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் போட்டியிட வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம்(20) வேட்பு மனுவை கையளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் மன்னார் நகர சபை, நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.

இதேவேளை மன்னார் நகரசபை மற்றும் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்சின் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இன்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தலைமையில் மன்னார் நகர சபை,நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்களாக 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் இன்று வியாழக்கிழமை (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

முந்தைய செய்தி கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக வைத்தியர் அருச்சுனா இராமநாதன்….
அடுத்த செய்தி ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லொக்கு பெட்டியின் உதவியாளர் கப்புறாளை கைது

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

மார்ச் 4, 2026
இலங்கை

யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

ஜனவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?