Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது – வவுனியா வைத்தியசாலை நிர்வாகம்!

ஏப்ரல் 15, 2025
வவுனியா
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இரு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

அதனை திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா வைத்தியசாலையில் இருந்து சொந்த செலவில் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே செட்டிகுளம் வைத்தியசாலைக்கு இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளதுடன், மீண்டும் சொந்த செலவில் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது.

இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியாசாலை நலன்புரி சங்கம் என்பன கவனம் செலுத்தவில்லை என பொது மக்களால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடலங்களை பெற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், பலரும் சடலங்களை கொண்டு செல்வதற்கு வாகனங்களை வாடகைக்கு அமர்துவதற்குரிய பொருளாதார நிலமை இன்மையால் அவதிப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நினைவேந்தலுக்காக பணம் பெற்ற மூவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு…
அடுத்த செய்தி தமக்கெதிரான போராட்டத்தை கண்டிக்க அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை கையாளுகிறது…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் -13 ஏப்ரல் 2025

ஏப்ரல் 13, 2025
இலங்கை

யாழில். சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – மூன்று பெண்கள் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

காற்றாலை திட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தம்!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் கைது

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?