கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிள்ளையான் என்று அழைக்கப்படுபவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீதான விசாரணைகள்
தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்புக்கு கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு உள்ளமை தொடர்பில் கணிசமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இதனைத் தெரிவித்தார்.



