பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இதில் புரதம்,நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இப்பழம் பல ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளதால், இது நீரிழிவு நோயாளர்களுக்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
பேரிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பேரிக்காய், மலச்சிக்கல் பிரச்சினைகளை இல்லாமல் செய்து வயிற்றை சுத்தமாக்குகிறது.
பேரிக்காயில் இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
பேரிக்காய் பழத்தில் அதிகளவான நீர் உள்ளது. ஆகவே, சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி.
சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டை சீராக்கவும்
உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.