இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் றுஷங்கன் இவ்வாறு தெரிவித்தார்.