சர்ச்சையை ஏற்படுத்திய மொன்றியல் நகர மண்டப வரவேற்புப் பலகை அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பலகைகளில் இளம் மொன்றியல் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் நகரத்தின் எதிர்காலத்திற்கான அவர்களின் விருப்பங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இலையுதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வரவேற்புப் பலகையை மொன்றியல் நகராட்சி அதிகாரப்பூர்வமாக அகற்றியுள்ளது,
அகற்றப்பட்ட வரவேற்பு பலகையில் இஸ்லாமிய ஹிஜாப் எனும் தலைக்கவசம் அணிந்த ஒரு பெண்ணை சித்தரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட நகர மண்டபத்தின் வரவேற்பறையில் ஒரு பெண் ஹிஜாப் அணிந்திருப்பதைக் காட்டிய பலகை, ஆன்லைனில் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
மேலும் “மதச்சார்பின்மையை ஆதரிக்கும் அதே வேளையில், பன்முகத்தன்மையைப் பற்றி – மொன்றியலின் சிறந்த கலாச்சார செல்வம் – பற்றி நாம் பேசலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று முதல்வர் பிளாண்டே அப்போது தெரிவித்திருந்தார்.
பென்சில் ஓவியத்தின் பாணியில் உள்ள படத்தில், குறித்த பெண் இரண்டு ஆண்களுக்கு நடுவில் நிற்கிறார் – ஒருவர் இளமையாகத் தெரிகிறார், பேஸ்பால் தொப்பி மற்றும் ஓவர் கோட் அணிந்திருக்கிறார், மேலும் ஒரு வயதான மனிதர் அவருக்கு முன்னால் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பதுபோலும் “மொன்றியல் நகர மண்டபத்திற்கு வருக!” என அவற்றின் மேலே பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து கியூபெக்கோயிஸ் தலைவர் புகார் அளித்தார், இது மதம் பொதுவெளியில் ஊடுருவுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
அநாகரிகமான நடத்தை குற்றச்சாட்டுகளுக்காக 11 பாடசாலை ஆசிரியர்கள் மொன்றியல் ஆரம்பப்பாடசாலையில் தங்கள் பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் இது நிகழ்ந்தது,என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் அவர்கள் தங்கள் மத நம்பிக்கை மூலம் மாணவர்களை நடத்தும் விதத்தையும் பாடத்திட்டத்தை அணுகும் விதத்தையும் பாதிக்க அனுமதித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து கியூபெக் பாடசாலைகளில் மதச்சார்பின்மையை கடினமாகும் திட்டங்களை மாகாணம் அறிவித்துள்ளது.
பல முஸ்லிம் சமூகக் குழுக்கள் உட்பட, படத்தை அகற்றுவதை எதிர்த்தவர்கள், இந்தப் படம் மொன்றியலின் பன்முகத்தன்மையை விளக்குவதாகக் கூறினர்.
இதேவேளை கியூபெக் மாகாண அரசாங்கம் பாடசாலைகளில் உள்ள துணை ஊழியர்களுக்கும் மத சின்னங்களை அணிவதற்கான தடையை விரிவுபடுத்தவும், மற்றும் மாணவர்கள் முகத்தை மூடிக்கொள்வதைத் தடுக்கவும் ஒரு சட்டமுன்வரைவை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது