அமெரிக்கா அதிபர் டிரம்ப் பாதுகாப்பு அதிகரிக்க வலியுறுத்தியதை அடுத்து, முதல் முறையாக கனடா எல்லையில் ரோந்து பணியில் RCMB ஈடுபட்டுள்ளது.
கனடா-அமெரிக்க எல்லையில் புதிய RCMP ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளுக்கு இடையே பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தியதிலிருந்து, ஒன்ராறியோவின் வின்ட்சரில் உள்ள RCMP பிரிவு அதிகாரிகள் கனடா-அமெரிக்க எல்லையில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“கனடாவிற்குள் வரும் மக்கள் அல்லது சட்டவிரோதமாக கனடாவை விட்டு வெளியேறும் பொருட்கள் குறித்து சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதாக என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எல்லை கடத்தல் குறித்த டிரம்பின் கவலைகளைத் தொடர்ந்து, கனடா 1.3 பில்லியன் டாலர் எல்லை பாதுகாப்புத் திட்டத்தை டிசம்பரில் அறிவித்தது. “எல்லையைப் பாதுகாக்க” ஒட்டாவா RCMP நடவடிக்கை எடுத்துள்ளது.