Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் – நா.வேதநாயகன்

மார்ச் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர்.என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்தார். அத்துடன் சந்தையினுள் மரக்கன்றும் நடுகை செய்தார்.

அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தினுள், திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில்,

முன்னைய காலங்களில் எமது மாகாணமே இலங்கையில் தூய்மையான மாகாணமாக இருந்தது. ஆனால் இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. எப்போது ‘சொப்பிங் பாக்’, ‘பிளாஸ்ரிக் போத்தல்’ என்பன அறிமுகத் தொடங்கியதோ அன்றே எமது சுற்றாடலும் மாசடையத் தொடங்கிவிட்டது.

எங்கள் இடத்தை அழகாக – தூய்மையாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எமது சூழல் அழகாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், வீதியில் குப்பைகளைப் போட்டிருக்கமாட்டோம். இளமையிலேயே எங்கள் பிள்ளைகளுக்கு சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பதை பழக்கவேண்டும். இன்று இங்குள்ள மாணவர்கள், எதிர்காலத்தில் பெரியவர்களாகும்போது சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பவர்களாக மாறவேண்டும்.

உங்களுக்கு நல்லதொரு பிரதேச செயலராக விஜயகுமார் கிடைத்திருக்கின்றார். அவர் இந்தப் பகுதியில் சிறப்பான மாற்றங்களைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.யசிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலர் ச.கிருசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட திண்மக் கழிவகற்றலுக்காக அட்டை மற்றும் துண்டுபிரசுரம் என்பன ஆளுநரால் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி குறட்டை எப்படி ஏற்படுகிறது? குறட்டை வராமல் தடுக்கும் முறைகள்
அடுத்த செய்தி 18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம் ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தொடரும் மண்சரிவு அபாயம்- பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள்!

நவம்பர் 25, 2025
இலங்கை

யாழில். காய்ச்சல் காரணமாக பெண் உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் – வைகோ

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகனேரியில் கணவனை வெட்டி கொலை செய்த மனைவி!

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?