செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பாடசாலை ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தை தயாரித்து வாட்ஸ்அப் ஊடாக தமது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த கண்டி பிரதான பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவர்கள் தொடர்பில் கண்டி பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த இரண்டு மாணவர்களும் பாடசாலை ஆசிரியர் பணிபுரியும் பாடசாலையிலேயே கல்வி பயின்று வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலை ஆசிரியை நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிகணினி என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திருமதி பலிப்பான விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்