பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட ஒட்டாவாவின் வடக்கு-தெற்கு டிரில்லியம் புகையிரத பாதையினுடான போக்குவரத்து ,எதிர்வரும் மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்கழும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரிவர்சைடு சவுத் வரை விரிவாக்கப்பட்டு மறுபெயரிடப்பட்ட பாதை 2 மற்றும் விமான நிலையத்திற்கு ஸ்பர் பாதை 4 ஆகியவை நான்கு ஆண்டுகளுக்கும் மேலான பணி மற்றும் $840 மில்லியன் டொலர்கள் செலவில் கடந்த ஜனவரி 6ம் திகதி திங்கள் அன்று திறக்கப்பட்டது .
புகையிரதங்கள் முதலில் வார நாட்களில் மட்டுமே இயங்கின, பின்னர் ஜனவரியில் சனிக்கிழமைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன.
போதுமான சாரதிகள் இல்லாததால், பயணிகள் தகவல் திரைகளில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய நேரம் தேவைப்பட்ட காரணத்தினாலும் , OC டிரான்ஸ்போ ஞாயிற்றுக்கிழமைகளில் பாதையை மூடி வைத்திருந்தது.
போக்குவரத்து பொது மேலாளர் ரெனீ அமில்கார் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு அறிக்கையில் , ஞாயிற்றுக்கிழமை சேவையை வழங்கத் தொடங்க போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்
OC டிரான்ஸ்போவில் இப்போது அதிக ஊழியர்கள் இருப்பதாகவும் , பராமரிப்பு குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன எனவும் , மேலும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் நம்பகமானதாகி வருகிறது என்று அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்தார்
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை ரயில்கள் இயங்கும், வாரத்தின் மற்ற நாட்களை விட இது குறைவான நேரமாகும். பேவியூ மற்றும் சவுத் கீஸ் நிலையங்களுக்கு இடையே இயங்கும் B2 பேருந்துகள் மார்ச் 29 சனிக்கிழமை வரை தொடர்ந்து இயங்கும் என்று அமில்கார் தெரிவித்துள்ளார் .