ரொறன்ரோவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில்
அடையாளந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டொராண்டோவில் ஸ்கார்போரோ பகுதியில் உள்ள களியாட்ட விடுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் துப்பாக்கிதாரியை கைது செய்யும் நடவடிக்கையில் அந்த நாட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.