யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை ஒரு சில மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் சென்ற பெண்ணொருவரிடம் இன்றைய தினம் புதன்கிழமை காலை உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணை வழிமறித்து அவரின் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டின் அடிப்படையில் , சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து பெண்ணிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை அவருடன் சென்ற மற்றைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.