Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பணத்தை சேர்ப்பதால் மகிழ்ச்சி ஒருபோதும் வராது – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் என்னவோ இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றது. ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகள் மாற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது,

இன்று எமது சமூகத்தில் பிறருக்கு நன்மை செய்பவர்கள் அருகிவிட்டார்கள். நன்மை செய்பவர்களையும், நன்மை செய்ய வருபவர்களையும் தூற்றுபவர்கள்தான் அதிகமாகிவிட்டார்கள். தாமும் நன்மை செய்யமாட்டார்கள், நன்மை செய்யவருபவர்களையும் செய்ய விடமாட்டார்கள். இந்தப் பழக்கம் இப்போது வளர்ந்து செல்கின்றது.

நாங்கள் ஒரு கையால் மற்றையவர்களுக்கு பலனை எதிர்பாராமல் உதவி செய்தால் எங்களுக்கு ஆயிரம் கைகள் உதவுவதற்கு தயாராக இருக்கும். அது இயற்கையானது. அதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

இன்றைய எங்கள் இளையோர்கள் வேறு உலகத்தில் இருக்கின்றார்கள். நாங்கள் சிறுவர்களாக இருக்கின்றபோது பாடசாலை முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன் விளையாடுவோம். தோட்ட வேலைகளைச் செய்வோம். ஆனால் இன்றைய சிறுவர்களுக்கு பொழுதுபோக்குவதற்கு இடமும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. எந்த நேரமும் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய நேரத்தைக் கொடுக்கவேண்டும்.

பணத்தை சேர்ப்பதால் மகிழ்ச்சி ஒருபோதும் வராது. நாங்கள் பிறருக்கு கொடுக்கும்போது – உதவி செய்யும் போதுதான் மகிழ்ச்சி வரும். மக்களுக்கு செய்யும் சேவை மகேசன் – கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானது. அதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்டடத்தை அமைத்துக் கொடுத்த தம்பதியினரை ஆளுநர் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்.

முந்தைய செய்தி ‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’
அடுத்த செய்தி அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை – நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தொட்டலங்க கண்ணாவிற்க்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

அக்டோபர் 11, 2025
இலங்கை

போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதற்காக நடைபவனி ஒன்றை முன்னெடுக்க திட்டம் !

ஜூன் 3, 2025
இலங்கை

இலங்கையில் வாகன விற்பனையில் வீழ்ச்சி!

அக்டோபர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?