கனடா உட்பட அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
திங்கட்கிழமை (10) இந்த அறிவித்தல் வெளியாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
கனடா மீது அமெரிக்கா வரி விதித்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஏற்கனவே கனடா உறுதியளித்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
மேலதிக வரிகள், செவ்வாய் (11) அல்லது புதன்கிழமை (12) அறிவிக்கப்படும் எனவும்டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றும் தனது விருப்பத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா ஜனாதிபதியின் இந்த அறிவித்தல் குறித்து தற்போது Paris நகரில் உள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்கவில்லை.