முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல் மற்றும் மழை வெள்ளத்தினால், மாவட்டத்தில் முக்கிய பாலமாக காணப்படும் நாயாற்று பாலத்தின் இரு பாலங்கள் உடைத்துள்ளன.
இந்த நிலையில் இந்த பாலம் வழியான போக்குவரத்து இன்று (18) வரைமுற்றாக தடைப்பட்ட நிலையில் பாலத்தின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால் மக்களை படகில் ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
புயலால் சேதமடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தினை திருத்தும் நடவடிக்கை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவினர் ஈடுபட்டுள்ளர்கள். இவர்களுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து ஒரு பாலம் திருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேதமடைந்த மற்றைய பாலத்தின் திருத்தப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வீதி ஊடான போக்குவரத்து கடந்த 21 நாட்கள் முற்றாக தடைப்பட்ட நிலையில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வெலிஓயா போன்ற பகுதிகளுக்கு பயணிக்கும் மக்களை இலங்கை கடற்படையினர் படகுகள் மூலம் ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த பகுதிகளில் இருந்து மக்கள் அன்றாட தேவைகளுக்காக மற்றம் பாடசாலை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவிற்கு சென்று வருகின்றார்கள்.

