இலங்கைக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்காக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் புதுச்சேரி மீனவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயத்தை வலியுறுத்தி அவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களுக்கு ஆயுதம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.