வவுனியாவில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தி 77 வது சுதந்திர தினத்தை அனுஷ்டிப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட சர்வ மத மனிதநேய பேரவையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.