கனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபரை ஆல்பர்ட்டா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாகஅல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் தேடப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது வேகமாக வாகனத்தை செலுத்தியதாகவும் வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் ரின்டட் கண்ணாடிகளை பொறுத்தியிருந்ததாகவும் குற்றம் சுமத்தி இந்த நபர் தேடப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் இவர் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் சந்தேக நபர் தொடர்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை குற்றச்சாட்டுகளும் இந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர் 18 வயதிற்கும் குறைந்த பத்ம வயது உடையவர் என்பதனால் இவர் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.