ஒட்டுசுட்டான் பகுதியில் நாய் ஒன்று தூக்கிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது கடந்த நாட்களில் சமூக வலைத்தளத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மத்தியஸ்த சபையின் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழ் தொடர்பாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பிணக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழ் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன, தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழில் நாயைக் கொல்ல வேண்டும் என்றோ அல்லது புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை. .
ஒரு நாய் ஒரு ஆட்டைக் கடித்த சம்பவம் தொடர்பாக ஆட்டின் உரிமையாளருக்கும் நாயின் உரிமையாளருக்கும் இடையிலான பிணக்கை தீர்ப்பதற்காக, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் நாயின் உரிமையாளர் , ஆடுகளின் உரிமையாளரிடம் நாயை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளமை சான்றிதழ் மூலம் அறிய முடிகின்றது.
இருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு தகராறு அல்லது தவறைத் தீர்க்க மத்தியஸ்த வாரியங்கள் முடிவுகளையோ அல்லது உத்தரவுகளையோ பிறப்பிப்பதில்லை, மேலும் தரப்பினர் தாங்களாகவே ஒரு உடன்பாட்டை எட்டினால், மத்தியஸ்த வாரியங்கள் அதை ஆவணப்படுத்தி தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழை வழங்குகின்றன.
மேலும் இந்த தீர்த்துவைக்கப்பட்டமைக்கான சான்றிதழுடன் சேர்த்து நிபந்தனைகளின்படி இந்த நாயைக் கொல்ல மத்தியஸ்த வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறும் ஒரு தவறான செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், படித்த புத்திஜீவிகளே பிரச்சினையை தீர்த்து வைப்பதட்கான மத்தியஸ்த சபையில் நியமிக்கப்படுகின்றனர்.
தன்னுடைய ஆட்டை கொன்ற நாயின் மீது ஆட்டின் உரிமையாளர் கடும் கோபங் கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது, இப்படி நாயின் மீது கோபம் உள்ள நபர் நாயை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்தியஸ்த சபையிடம் கூறும்போது நாயை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் மத்தியஸ்தசபை நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படையுங்கள் என கூறியது முற்று முழுதாக பிழையான ஒரு விடயமே.
ஒரு பிரச்சினைக்கான தீர்வை எட்டும் போது அதனால் இவ்வாறான பிரச்சினைகளும் நிகழலாம் என மத்தியஸ்தசபை சிந்திருக்க வேண்டும்.
சிந்திக்காமல் உடனே ஒரு தீர்வை வழங்கி அதற்கான சான்றிதழை வழங்கியதும் தவறான விடயம்.
இந்த நாயின் இழப்பில் மத்தியஸ்த சபையை சார்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதே நிதர்சனமான உண்மை
இந்த சம்பவம் தொடர்பாக நாயைக் கொன்ற நபர் மீது மாங்குளம் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.