2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 388 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 488 ஆகவும் பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டு கிழக்கு வனவிலங்கு வலயத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உயிரிழந்தன. உடலில் விஷம் சேறுதல், ரயில் விபத்துக்கள், வீதி விபத்துக்கள்விவசாய கிணறுகளில் விழுதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 78 காட்டு யானைகளும், அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 53 யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் 43 யானைகளும் உயிரிழந்திருந்தன.
துப்பாக்கிச் சூட்டில் 84 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ஹக்கபட்டாஸ் சாப்பிடத்தில் 52 யானைகளும் உயிரிழந்துள்ளன.
2024 ஆம் ஆண்டில், காட்டு யானைகளின் தாக்குதலால் 155 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன. கிழக்கு மற்றும் அநுராதபுரம் வனவிலங்கு வலயங்களிலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் கடந்த சில நாட்களில் 16 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இந்த இறப்புகளில் பெரும்பாலானவை துப்பாக்கி பிரயோகங்களினால் ஏற்பட்டதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.