Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தமிழரசு கட்சியால் பிற்போடப்பட்ட கலந்துரையாடல்.

ஜனவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழரசு கட்சியின் முடிவுக்காக, தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. அந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தது.

அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராச கஜேந்திரன் ஆகியோர், தமிழரசு கட்சியின் பதில் தலைவரும், வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானத்தின் வீட்டிற்கு நேரில் சென்று கலந்துரையிடலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தமது கட்சி சார்பில் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது எனவும், எதிர்வரும் 08ஆம் திகதி தமிழரசின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதால் , கலந்துரையாடல் தொடர்பில் கூட்டத்தில் முடிவெடுத்து, அதன் பிரகாரம் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு கஜேந்திரகுமார் தெரிவித்ததை அடுத்து, 08ஆம் திகதி தமிழரசு கட்சி தனது முடிவினை அறிவித்த பின்னர், கலந்துரையாடலை மேற்கொள்வோம் என கூறியுள்ளதால் , இன்றைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.
அடுத்த செய்தி மாடு மேய்க்க சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஜூலை 5, 2025
இலங்கை

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

ஜூலை 24, 2025
இலங்கை

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?