Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் வர்த்தக கண்காட்சி ஆரம்பம்.

ஜனவரி 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

முற்றவெளி மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் , இரவு 08.30 மணி வரையில் இடம்பெறவுள்ளது.

15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி, ‘வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் நடைபெறுகிறது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.

குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும்.

300க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், கல்வி, வாகனம், விவசாயம், ஆடையுற்பத்தி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த கண்காட்சியில் கழிவு முகாமைத்துவ நிலையங்களை நிறுவியுள்ளோம். கண்காட்சி நடைபெறவுள்ள தினங்களில் உங்களிடம் உள்ள பிளாஸ்ரிக் கழிவுகளை கொண்டு வந்து ஒப்படைத்து பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க பங்களிப்பு செய்யும்படி கோருகிறோம் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா!
அடுத்த செய்தி வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் மடக்கி பிடிப்பு – இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

அத்துமீறி மீன் பிடித்த தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் கைது..

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஜனவரி 8, 2026
இலங்கை

கொக்குத்தொடுவாயில் மக்களை நேரில் சென்று பார்வையிடார் – ரவிகரன் எம்.பி!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?