நாட்டில் இன்று முதல் (22) நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது 1,095 ரூபாவாக இருந்த நிலக்கடலை ஒரு கிலோவின், புதிய விலை ரூ.995 ஆக உள்ளது.
ஒரு கிலோ பழுப்பு சீனி (brown sugar) முந்தைய விலை ரூ.340 ஆக இருந்தது, புதிய விலை ரூ.300 ஆகும்.
210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின், புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஒரு கிலோ சிவப்பு பட்டாணியின் முந்தைய விலை ரூ.795 ஆக இருந்தது, புதிய விலை ரூ.765 ஆகும்.
கௌப்பி கிலோ ஒன்றின் முந்தைய விலை 795 ரூபாவாகவும், புதிய விலை 765 ரூபாவாகவும் காணப்பட்டது
ஒரு கிலோ நெத்தலியின் முந்தைய விலை ரூ. 960 ஆக இருந்தது, புதிய விலை ரூ. 940 ஆகும்.
845 ரூபாவாக இருந்த ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் புதிய விலை 830 ரூபாவாக உள்ளது.
பாஸ்மதி அரிசியின் முந்தைய விலை (பிரீமியர்) கிலோவுக்கு ரூ.655 ஆக இருந்தது, புதிய விலை ரூ.645 ஆகும்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை 240 ரூபாவாகவும், புதிய விலை 230 ரூபாவாகவும் உள்ளது.
ஒரு கிலோ பருப்பின் முந்தைய விலை ரூ.290 ஆக இருந்தது, புதிய விலை ரூ.288 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 242 ரூபாவாகவும், புதிய விலை 240 ரூபாவாகவும் உள்ளது.