பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (20) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (21) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, வில்கமுவ, யடவத்தை மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக 2ஆம் நிலை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக பதுளை – பாததும்பர,பன்வில, மெததும்பர,
குருணாகல் – ரிதிகம, மாத்தளை – லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல ஆகும்.