யாழ்ப்பாணம், காரைநகர் கசூரினா கடற்கரை சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் கொண்ட மண்டபம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மண்டபத்தினை திறந்து வைத்தார்.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், குறித்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.